Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 04 செப்டம்பர் 2026 | 19 ஆவணி பராபவ வருடம்

“த.வெ.க. ஆட்சியின் 116 நாட்களில் தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் சென்றுவிட்டது” – உதயநிதி ஸ்டாலின்

“த.வெ.க. ஆட்சியின் 116 நாட்களில் தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் சென்றுவிட்டது” – உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்ததை த.வெ.க. அரசு தனது கொள்கை விளக்கக் குறிப்புகள் மூலம் ஒப்புக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் கடந்த ஆகஸ்டு 5-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் ஆகஸ்டு 6-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்டு 7, 10, 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. ஆகஸ்டு 12-ம் தேதி நிதியமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதிலுரை வழங்கினர்.இதையடுத்து ஆகஸ்டு 17-ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை 43 துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கியது.காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியதும் முதலில் கேள்வி நேரம் நடைபெற்றது. அது முடிந்த பின்னர் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கியது.அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. ஆட்சியில் வேகமாக முன்னேறிய தமிழ்நாடு, த.வெ.க. ஆட்சியின் 116 நாட்களில் பின்னோக்கிச் சென்று கொண்டிருப்பதாக விமர்சித்தார். மேலும் அவர் கூறியதாவது:“தற்போது வெளியிடப்பட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், தி.மு.க. ஆட்சியில் குற்றங்கள் குறைந்ததாகவும், சாதியப் பாகுபாடு காரணமான கொலைகள் குறைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் எங்கள் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்ததை ஒப்புக்கொண்டதற்காக அரசுக்கு நன்றி.ஆனால், கடந்த 116 நாட்களில் பெண்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில் தினமும் வெட்டு, குத்து போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 10 ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளன.

Advertisement
அவற்றுக்குக்கூட வேறு பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்த 116 நாட்களில் 8 சிறை மரணங்கள் நடந்துள்ளன. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை; குறைந்தபட்சம் வருத்தம்கூட தெரிவிக்கப்படவில்லைகடந்த 116 நாட்களில் 200 கொலைகளும், 500 பாலியல் வன்கொடுமைகளும் நடைபெற்றுள்ளன. த.வெ.க. ஆட்சியில் சட்டம் இருக்கிறது; ஆனால் ஒழுங்கு இல்லை.கடந்த காலத்தில் குற்றச் சம்பவங்களுக்கு அரசே காரணம் என்று விமர்சித்த கட்சி, ஆட்சிக்கு வந்த பிறகு தனிநபர்கள்தான் காரணம் என்று மக்களுக்கு விளக்கம் அளிக்கிறது.ஆளும் அரசை வெளிப்படையாக விமர்சிக்கும் பா.ஜ.க.வினரை ஏன் கைது செய்வதில்லை? அவர்களுக்கு எதிராக ஏன் புகார் கூட அளிக்கப்படுவதில்லை? எங்களுக்கு ஒன்று என்றால் ரத்தம்; அவர்களுக்கு ஒன்று என்றால் தக்காளி சட்னியா?பா.ஜ.க.வினர் ஆளுங்கட்சியை விமர்சித்தாலும் அதை வெளியில் கூறக்கூடாது என்ற அணுகுமுறையை இதுவரை பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை.தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால் அவற்றில் பல இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்று கூறினீர்கள். தற்போது இந்த அரசின் திட்டங்களை தாய்மாமன் காதுகுத்தும் திட்டம் என்று வேண்டுமானால் அழைக்கலாம்.அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதைவிட, அரசு வெளியிடும் ரீல்ஸ் அதிகமான மக்களை சென்றடைந்தால் போதும் என்று நினைப்பது போல் உள்ளது.மக்கள் எங்களுக்கு கேள்வி கேட்கும் பொறுப்பை வழங்கியுள்ளனர். சரியான கேள்விகளை எழுப்பி, அதற்கான பதில்களை அரசிடம் பெற வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.எனவே, தொடர்பில்லாத சிறுகதைகளை கூறாமல் முதலமைச்சர் நேரடியாக பதிலளிக்க வேண்டும். சமூக வலைதள ரீல்ஸ் உள்ளடக்கத்திற்காகவோ, கேமரா முன் நடிப்பதற்காகவோ, விவாதத்தை திசைதிருப்புவதற்காகவோ இல்லாமல், கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும்.”தொடர்ந்து, தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்ட பல்வேறு திட்டங்களையும் உதயநிதி ஸ்டாலின் பட்டியலிட்டார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு