Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 21 செப்டம்பர் 2026 | 5 புரட்டாசி பராபவ வருடம்

திருப்பதி பிரம்மோற்சவ விழா.. தங்கத் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த மலையப்ப சுவாமி

திருப்பதி பிரம்மோற்சவ விழா.. தங்கத் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தங்கத் தேரோட்டம் இன்று மாலை விமரிசையாக நடைபெற்றது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தங்க கருட சேவை நேற்று இரவு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் 6-ம் நாளான இன்று காலை, அனுமந்த வாகனத்தில் கோதண்டராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.

Advertisement
பின்னர் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாட வீதி கேலரிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, தீபாராதனை செய்து சுவாமியை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து இன்று மாலை அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்தார். தங்கத் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என பக்தி முழக்கமிட்டபடி தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தனர். தங்கத் தேரோட்டத்தைக் காண மாட வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் சுவாமியை வழிபட்டு பக்தியில் திளைத்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹107.77
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு