Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 05 நவம்பர் 2026 | 19 ஐப்பசி பராபவ வருடம்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.. கிறிஸ்டியானோ ரொனால்டோ திடீர் அறிவிப்பு!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.. கிறிஸ்டியானோ ரொனால்டோ திடீர் அறிவிப்பு!

உலக கால்பந்து அரங்கில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ, தற்போது சவூதி புரோ லீக் தொடரில் அல் நாசர் அணிக்காகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்காகவும் முன்கள வீரராகவும் கேப்டனாகவும் விளையாடி வருகிறார். 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடர் முடிந்ததும் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற அவர் திட்டமிட்டிருந்தார். இருப்பினும், தொடர்ந்து போர்ச்சுகல் அணிக்காக விளையாட வேண்டும் என்று அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு அவரிடம் வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், போர்ச்சுகல் அணியின் புதிய பயிற்சியாளரான ஜார்ஜ் ஜீசஸுடன் ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடு காரணமாக, ரொனால்டோ அணி முகாமில் இருந்து வெளியேறினார்.

Advertisement
அவரது இந்த நடவடிக்கையை ஒழுங்கீனமாகக் கருதிய போர்ச்சுகல் கால்பந்து சம்மேளனம், அவசரமாக ஒழுங்கு நடவடிக்கையைத் தொடங்கியதுடன், அவரை அணியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கமும் செய்துள்ளது. இந்த நடவடிக்கை ரொனால்டோவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இத்தகைய சூழலில், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை ரொனால்டோ தற்போது வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் சுமார் 5 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். ரொனால்டோவின் இந்தத் திடீர் அறிவிப்பு கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,385
🥈 Silver ₹210.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு