தமிழ்நாடு நாள் விழாவில் தமிழறிஞர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு - 76 பேருக்கு தமிழ்ச்செம்மல் விருதுகள் வழங்கல்!
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டது. மேலும், 76 பேருக்கு தமிழ்ச்செம்மல் விருதுகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மெட்ராஸ் மாநிலம் உருவான நவம்பர் 1-ஆம் தேதியையும், தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் முன்மொழிந்து நிறைவேற்றிய ஜூலை 18-ஆம் தேதியையும் தமிழ்நாடு நாள் விழாவாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த ஜூலை 18-ஆம் தேதி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கப் போராடிய தலைவர்களின் தியாகத்தையும் போராட்ட வரலாற்றையும் நினைவுகூரும் வகையில், நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு நாள் விழா சென்னையில் நடைபெற்றது. சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் நடைபெற்ற இவ்விழாவுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த் தலைமை தாங்கினார். பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாட்டின் எல்லைகளை நிர்ணயிப்பதற்காகப் பாடுபட்ட சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், தளபதி விநாயகம், மங்கலங்கிழார், மார்ஷல் நேசமணி, திருவாலங்காடு திருமலைப்பிள்ளை, திருத்தணி ரஷீத், பி.எஸ்.