தீபாவளியன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.?
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளப் பகுதிகளில் இருந்து தெற்கு உள் கர்நாடகா வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையான நாளை (நவம்பர் 8) தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.