'தனி ஒருவன்' இயக்குநர் மோகன் ராஜாவுடன் இணையும் கார்த்தி... புதிய படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா இணையும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை இயக்கிய மோகன் ராஜா, ரீமேக் படங்களுடன் மட்டுமல்லாமல், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற சொந்தக் கதைகளை மையமாகக் கொண்ட படங்கள் மூலமும் தனித்துவமான இயக்குநராக அறியப்பட்டவர். அண்மையில் மலையாளத்தில் வெற்றி பெற்ற *லூசிபர்* படத்தை தெலுங்கில் *காட் பாதர்* என்ற பெயரில் இயக்கியிருந்தார்.இந்நிலையில், கார்த்தியை கதாநாயகனாக வைத்து தனது அடுத்த படத்தை மோகன் ராஜா எழுதி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.தற்போது கார்த்தி நடித்துள்ள சர்தார் 2 திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அந்தப் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு, மோகன் ராஜா - கார்த்தி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பட அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், கார்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜாவுடன் மீண்டும் இணைவதில் பெருமை கொள்வதாகவும், குடும்ப பொழுதுபோக்கையும் ஊக்கமூட்டும் நாயகத்துவத்தையும் மையமாகக் கொண்ட இந்தப் புதிய திரைப்படத்தை எஸ். லட்சுமண் குமார் தயாரிக்கிறார் என்றும் தெரிவித்துள்ளது.