Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 03 அக்டோபர் 2026 | 17 புரட்டாசி பராபவ வருடம்

“டோரதி” படத்தில் பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள் - சூர்யா பாராட்டு

“டோரதி” படத்தில் பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள் - சூர்யா பாராட்டு

தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான பாணியை உருவாக்கியுள்ள இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1990-களின் பின்னணியில் நகரும் கதையாக உருவாகியுள்ள ‘டோரதி’, சாதி சார்ந்த வன்முறை மற்றும் இரு நண்பர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகும் 10-வது திரைப்படம் என்ற பெருமையையும் ‘டோரதி’ பெற்றுள்ளது. திரையரங்குகளில் வெளியானது முதல் இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நடிகர் தனுஷ், நடிகை ஸ்ரீலீலா, இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளனர்.

Advertisement
இந்த நிலையில், நடிகர் சூர்யாவும் ‘டோரதி’ திரைப்படத்தை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். படத்தில் இதுவரை அதிகம் பேசப்படாத ஒரு விஷயத்தை துணிச்சலுடன் கையாண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சொல்ல நினைத்த கருத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு வலு சேர்ப்பதாகவும், இளையராஜாவின் இசை மனதை நெகிழச் செய்வதாகவும் சூர்யா தனது பதிவில் தெரிவித்துள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் அவர் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இதனிடையே, ‘டோரதி’ திரைப்படம் வெளியான 6 நாட்களில் ரூ.7 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு