Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

ஜூனியர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

ஜூனியர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் 8 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, நடப்பு சாம்பியனான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அந்த அணிக்கு பர்ஹான் யூசுப் கேப்டனாக செயல்படுகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை கைப்பற்றியது.

Advertisement
நடப்பு தொடரின் லீக் சுற்றிலும் இந்திய அணியை பாகிஸ்தான் தோற்கடித்துள்ளது. இந்நிலையில், முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இதற்கிடையே, இறுதிப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பர்ஹான் யூசுப் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு