ஜூனியர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
14 Nov 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Nov 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஜூனியர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

ஜூனியர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் 8 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, நடப்பு சாம்பியனான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அந்த அணிக்கு பர்ஹான் யூசுப் கேப்டனாக செயல்படுகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை கைப்பற்றியது. நடப்பு தொடரின் லீக் சுற்றிலும் இந்திய அணியை பாகிஸ்தான் தோற்கடித்துள்ளது. இந்நிலையில், முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இதற்கிடையே, இறுதிப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பர்ஹான் யூசுப் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.