Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்: தமிழ்நாடு அணிக்கு எதிராக ரெயில்வே பந்துவீச்சு தேர்வு

சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்: தமிழ்நாடு அணிக்கு எதிராக ரெயில்வே பந்துவீச்சு தேர்வு

இந்தியாவின் முன்னணி உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டி இன்று தொடங்கியது. மும்பை, இந்தூர், கொல்கத்தா, நியூ சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தத் தொடர் டிசம்பர் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் 32 அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறும்.

Advertisement
சூப்பர் லீக் சுற்றில் தகுதி பெற்ற அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டியிடும். இந்தச் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். தொடரின் முதல் நாளான இன்று மொத்தம் 16 போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் தமிழ்நாடு மற்றும் ரெயில்வே அணிகள் மோதும் ஆட்டமும் ஒன்றாகும். இப்போட்டிக்கான டாஸ் வென்ற ரெயில்வே அணியின் கேப்டன் முகமது சைஃப் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு