சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்: தமிழ்நாடு அணிக்கு எதிராக ரெயில்வே பந்துவீச்சு தேர்வு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
14 Nov 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Nov 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்: தமிழ்நாடு அணிக்கு எதிராக ரெயில்வே பந்துவீச்சு தேர்வு

சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்: தமிழ்நாடு அணிக்கு எதிராக ரெயில்வே பந்துவீச்சு தேர்வு

இந்தியாவின் முன்னணி உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டி இன்று தொடங்கியது. மும்பை, இந்தூர், கொல்கத்தா, நியூ சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தத் தொடர் டிசம்பர் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் 32 அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் லீக் சுற்றில் தகுதி பெற்ற அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டியிடும். இந்தச் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். தொடரின் முதல் நாளான இன்று மொத்தம் 16 போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் தமிழ்நாடு மற்றும் ரெயில்வே அணிகள் மோதும் ஆட்டமும் ஒன்றாகும். இப்போட்டிக்கான டாஸ் வென்ற ரெயில்வே அணியின் கேப்டன் முகமது சைஃப் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.