Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

ஜூனியர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

ஜூனியர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணிக்கு 338 ரன்களை வெற்றி இலக்காக பாகிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது. ஓமனின் அல் அமரத்தில் நடைபெற்று வரும் இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பர்ஹான் யூசுப் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் உஸ்மான் கான் அதிரடியாக விளையாடி 111 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார். அவரது ஆட்டத்தில் 11 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் இடம்பெற்றன. மற்றொரு வீரரான அப்துல் காதிர் 54 பந்துகளை எதிர்கொண்டு 80 ரன்கள் குவித்தார். இதில் 8 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். கேப்டன் பர்ஹான் யூசுப் தனது பங்கிற்கு 60 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார். முக்கிய வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 337 ரன்கள் எடுத்தது.

Advertisement
இந்திய அணியின் தரப்பில் அதிகபட்சமாக காவ்யா படேல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால், இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்திய அணி 338 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை ஜூனியர் ஆசிய கோப்பையை 8 முறை கைப்பற்றியுள்ள இந்திய அணி, தற்போது 9-வது முறையாக கோப்பையை வெல்லும் இலக்குடன் களமிறங்குகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. மேலும், நடப்பு தொடரின் லீக் சுற்றிலும் இந்தியாவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. இந்நிலையில், முந்தைய இரண்டு தோல்விகளுக்கும் பதிலடி கொடுத்து இந்திய அணி கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு