Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 03 நவம்பர் 2026 | 17 ஐப்பசி பராபவ வருடம்

செல்போனை உடைத்த தந்தை... குக்கர் மூடி, கத்தியால் தாக்கிக் கொன்ற மகள் கைது

செல்போனை உடைத்த தந்தை... குக்கர் மூடி, கத்தியால் தாக்கிக் கொன்ற மகள் கைது

குஜராத் மாநிலத்தில் செல்போனில் தொடர்ந்து கேம் விளையாடிய மகளின் போனை தந்தை உடைத்ததால் ஏற்பட்ட தகராறு, கொலையில் முடிந்துள்ளது. ஆத்திரமடைந்த 22 வயது மகள், குக்கர் மூடி மற்றும் சமையலறை கத்தியால் தந்தையைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள கோசாட் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் சவுகான் (55). இவரது மகள் காஜல் (22). இவர் வீட்டு வேலைகளில் ஈடுபடாமல், பெரும்பாலான நேரத்தை செல்போனில் கேம் விளையாடுவதிலேயே செலவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 31-ம் தேதி இரவு வேலை முடிந்து ரமேஷ் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, மகள் எப்போதும் செல்போனில் மூழ்கிக் கிடப்பது குறித்து அவரது மனைவி மஞ்சுளா, கணவரிடம் தெரிவித்தார். இதையடுத்து வீட்டுக்கு வந்த ரமேஷ், மகளைக் கண்டித்ததுடன், அவர் வைத்திருந்த செல்போனைப் பிடுங்கி தரையில் வீசி உடைத்தார்.

Advertisement
இதனால் கடும் கோபமடைந்த காஜல், சமையலறைக்குச் சென்று பிரஷர் குக்கரின் மூடியை எடுத்து தந்தையின் தலையில் பலமாகத் தாக்கினார். தொடர்ந்து அங்கிருந்த கத்தியால் அவரது வயிற்றிலும் பலமுறை குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமேஷை குடும்பத்தினர் மீட்டு சூரத் சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அம்ரோலி போலீசார், தந்தையைக் கொலை செய்ததாக மகள் காஜலைக் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. செல்போன் உடைக்கப்பட்ட ஆத்திரத்தில் மகளே தந்தையைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு