Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 03 நவம்பர் 2026 | 17 ஐப்பசி பராபவ வருடம்

தீபாவளியை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளியை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நெல்லை மேலப்பாளையம் கால்நடைச் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதில் ஒரு வேலி ஆடு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனையானது. ஒரே நாளில் இந்தச் சந்தையில் ரூ.4 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெறும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். தென் மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச் சந்தைக்கு அடுத்தபடியாக மேலப்பாளையம் சந்தை பிரபலமாக உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் சந்தை நடைபெறுவது வழக்கம். தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் இந்தச் சந்தையில் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும். அந்த வகையில், வரும் 8ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளதால், இன்று அதிகாலை முதலே சந்தையில் விற்பனை சூடுபிடித்தது. ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள், பொதுமக்கள், இறைச்சிக் கடை உரிமையாளர்கள் என ஏராளமானோர் திரண்டனர். மொத்த விற்பனைக்காக வந்த வியாபாரிகள் ஒவ்வொருவரும் 8 முதல் 10 ஆடுகள் வரை வாங்கிச் சென்றனர். சந்தைக்கு ஆடுகளைக் கொண்டு வருவதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர் மினி லாரிகள் மூலம் ஆடுகளை மொத்தமாகக் கொண்டு வந்து விற்பனை செய்தனர். குறும்பாடு, செம்மறி ஆடு, வெள்ளாடு என மூன்று வகையான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.

Advertisement
வெளியூர்களுக்கு இறைச்சி விற்பனைக்காக ஆடுகளை வாங்க வந்த வியாபாரிகள் செம்மறி ஆடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர். அதே நேரத்தில், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் வெள்ளாடுகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுடன் தேனி, மதுரை மற்றும் கேரள மாநில வியாபாரிகளும் அதிக எண்ணிக்கையில் சந்தைக்கு வந்திருந்தனர். ஆடுகளின் உயரம், எடை மற்றும் இறைச்சி அளவைக் கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் வேலி ஆடு ஒன்று ரூ.50 ஆயிரம் வரை விற்பனையானது. ஒரு செம்பு கிடா ரூ.28 ஆயிரத்திற்கும், சண்ட கிடா ரூ.22 ஆயிரத்திற்கும் விலை போனது. பாவூர்சத்திரத்தில் இருந்து விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஒரு கிடா ரூ.40 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரங்களை விட இந்த முறை ஆடுகளின் விற்பனை அதிகமாக இருந்ததுடன், அவற்றுக்கு நல்ல விலையும் கிடைத்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆடுகள் விற்பனையைத் தொடர்ந்து, கருவாடு வகைகள், கோழி உள்ளிட்ட இறைச்சிப் பொருட்களின் விற்பனையும் சந்தையில் சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இன்று ஒரே நாளில் மேலப்பாளையம் சந்தையின் மொத்த வர்த்தகம் ரூ.4 கோடியைக் கடக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு