Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 03 நவம்பர் 2026 | 17 ஐப்பசி பராபவ வருடம்

ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை நோரா பதேகிக்கு மீண்டும் சம்மன்

ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை நோரா பதேகிக்கு மீண்டும் சம்மன்

பாலிவுட் நடிகை நோரா பதேகிக்கு, சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய ரூ.200 கோடி மோசடி வழக்கில் டெல்லி நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள நோரா பதேகியிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டு, அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நவம்பர் 2-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது சாட்சியம் அளிக்க நோரா பதேகி ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் அன்றைய தினம் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இதையடுத்து, அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி மனு தாக்கல் செய்தனர். குறுகிய காலத்திற்கு முன்புதான் சம்மன் கிடைத்ததாகவும், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட தொழில்முறை பணிகள் காரணமாக அவரால் ஆஜராக முடியவில்லை என்றும் விளக்கம் அளித்தனர். இதனை ஏற்காத நீதிபதி, சாட்சியாக அழைக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியது அவசியம் என்றும், நீதிமன்ற நடவடிக்கைகளை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் நேரில் ஆஜராகுமாறு நோரா பதேகிக்கு மீண்டும் சம்மன் பிறப்பித்துள்ளது.

Advertisement
இதற்கிடையில், நோரா பதேகியின் சட்டக் குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், இந்த வழக்கில் அவர் குற்றம் சாட்டப்பட்டவர் கிடையாது என்றும், எந்தக் குற்றச் செயலிலும் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற விசாரணைக்கு உதவும் நோக்கில் சாட்சியாக மட்டுமே அவர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளனர். டெல்லி ரோகிணி சிறையில் இருந்தபோது, அரசு அதிகாரி எனக் கூறி ஆள்மாறாட்டம் செய்த சுகேஷ் சந்திரசேகர், முன்னாள் ரான்பாக்ஸி நிறுவனத் தலைவர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் இருந்து சுமார் ரூ.200 கோடியைப் பறித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா பதேகி உள்ளிட்டோரிடமும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு