Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 03 நவம்பர் 2026 | 17 ஐப்பசி பராபவ வருடம்

தீபாவளியை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை விநியோகம்

தீபாவளியை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை விநியோகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் இன்று (நவம்பர் 3) முதல் நியாய விலைக் கடைகள் வாயிலாக வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2026ஆம் ஆண்டு தீபாவளிக்கான ஆடைகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இன்று முதல் பயனாளிகளுக்கு அவை விநியோகிக்கப்படுகின்றன.

Advertisement
முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்ப அட்டைதாரர்கள் வரும் நவம்பர் 7ஆம் தேதி வரை தங்களுக்குரிய நியாய விலைக் கடைகளில் இலவச வேட்டி, சேலைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக, பயனாளிகள் தங்களது குடும்ப அட்டையுடன் நேரில் சென்று ஆடைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விநியோகப் பணிகளில் தாமதம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், நியாய விலைக் கடைகளுக்கு ஆடைகளைக் கொண்டு சேர்ப்பது மற்றும் பயனாளிகளுக்கு வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு