சீன வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தென்கிழக்கு ஆசிய கூட்டமைப்பு (ASEAN) நாடுகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.இந்த மாநாட்டில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் பங்கேற்றார். நிகழ்வின் ஒரு பகுதியாக அவர் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியை நேரில் சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.சந்திப்பின் போது இந்தியா–சீனா எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை ஜெய்சங்கர் தெளிவாக எடுத்துரைத்தார்.
மேலும், எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் நிலைத்தன்மை நிலவுவது இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் அடிப்படை அம்சம் என்று அவர் குறிப்பிட்டார்.அதேபோல், இந்தியா–சீனா உறவு பரஸ்பர மரியாதை, இரு தரப்புக்கும் பயனளிக்கும் ஒத்துழைப்பு மற்றும் ஒருவரின் உணர்வுகளை மற்றொருவர் மதிக்கும் அணுகுமுறையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியிடம் வலியுறுத்தினார்.