Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 12 அக்டோபர் 2026 | 26 புரட்டாசி பராபவ வருடம்

சிவகாசியில் சூடுபிடித்த பட்டாசு விற்பனை: வெளியூர் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்!

சிவகாசியில் சூடுபிடித்த பட்டாசு விற்பனை: வெளியூர் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் பட்டாசு விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பட்டாசுகளை வாங்க வருவதால் நகரின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனைக்காக நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிவகாசியில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 10 நாட்களாக சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசுக் கடைகளில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக, நேற்று விடுமுறை தினம் என்பதால் மதுரை, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வாகனங்களில் வந்து தங்களுக்குத் தேவையான பட்டாசுகளை வாங்கிச் சென்றனர்.

Advertisement
வெளியூர்களில் இருந்து வந்த வாடிக்கையாளர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒரே நேரத்தில் விருதுநகர் மற்றும் சாத்தூர் சாலைகள் வழியாக சிவகாசிக்குள் நுழைந்ததால், இரு சாலைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சிவகாசி துணைக் காவல் கண்காணிப்பாளர் அனில்குமாரின் உத்தரவின்பேரில், போக்குவரத்துக் காவலர்கள் வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் நெரிசலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. தீபாவளி நெருங்கும் நாட்களில் சிவகாசிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், அடுத்தடுத்த நாட்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும் சூழல் நிலவுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு