Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 11 செப்டம்பர் 2026 | 26 ஆவணி பராபவ வருடம்

‘சிறந்த சிந்தனையாளர்கள் அதிகம் பேசமாட்டார்கள்’ - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

‘சிறந்த சிந்தனையாளர்கள் அதிகம் பேசமாட்டார்கள்’ - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவர் கவுரவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சட்டமன்றத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் குறைவாக பேசுவதாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் விமர்சனம் செய்ததாக குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் விஜய், தனது பதிலுரையின் மூலம் எழுப்பப்பட்ட அனைத்து விமர்சனங்களுக்கும் விளக்கம் அளித்ததாக அவர் தெரிவித்தார். மேலும், சிறந்த சிந்தனையாளர்கள் அதிகமாக பேசுவதில்லை என்றும் ஜே.சி.டி.பிரபாகர் கூறினார்.

Advertisement
ஒரு காலத்தில் அடுக்குமொழியில் சிறப்பாக பேசுபவர்களை கவர்ந்து, அவர்களின் பேச்சுத் திறனை அடிப்படையாகக் கொண்டு மக்கள் வாக்களித்த நிலை இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் தற்போது அந்த சூழல் மாறிவிட்டதாகவும் தெரிவித்தார். மக்களுக்கு உண்மையாக சேவை செய்யக்கூடியவர் என யாரை நம்புகிறார்களோ, அவர்களுக்கே வெற்றி கிடைக்கும் என்ற நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளதாகவும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறினார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு