Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 11 செப்டம்பர் 2026 | 26 ஆவணி பராபவ வருடம்

இம்மானுவேல் சேகரனார் நினைவுநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை

இம்மானுவேல் சேகரனார் நினைவுநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது நினைவை போற்றி வருகின்றனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள இம்மானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக அமைச்சர்கள் நிர்மல் குமார், அருண்ராஜ், பிரபு, மதன் ராஜா, ராஜீவ், விக்னேஷ் உள்ளிட்டோர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முதலில், இம்மானுவேல் சேகரனாரின் புதிய மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisement
தொடர்ந்து, நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்களும் இம்மானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர். முக்கிய அரசியல் தலைவர்கள் வருகை தர உள்ளதால், பரமக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு