Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 04 அக்டோபர் 2026 | 18 புரட்டாசி பராபவ வருடம்

கோவையில் இருந்து தாராபுரத்துக்கு ஹெலிகாப்டரில் செல்லும் முதல்-அமைச்சர் விஜய்

கோவையில் இருந்து தாராபுரத்துக்கு ஹெலிகாப்டரில் செல்லும் முதல்-அமைச்சர் விஜய்

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக முதல்-அமைச்சர் விஜய் இன்று கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் செல்கிறார். தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் தாராபுரம் மாருதிநகரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்துக்கு செல்கிறார். சாலை வழியாக விஜய் பயணித்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தாராபுரத்தை சென்றடைந்ததும் ரோடு ஷோ மூலம் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.

Advertisement
மாலை 4 மணியுடன் பிரசாரத்தை நிறைவு செய்துவிட்டு அவர் சென்னை திரும்ப உள்ளார். கடந்த 30-ந் தேதி விஜய் கோவையில் இருந்து அவினாசி சாலை, கருமத்தம்பட்டி, காரணம்பேட்டை, பல்லடம் வழியாக காரில் தாராபுரம் சென்றிருந்தார். அப்போது வழியெங்கும் பொதுமக்கள் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதனால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அவர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், விஜயின் சாலைப் பயணத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்களும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதுபோன்ற பாதிப்புகளைத் தவிர்க்கும் நோக்கில், அவரது தற்போதைய பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு