கோவையில் இருந்து தாராபுரத்துக்கு ஹெலிகாப்டரில் செல்லும் முதல்-அமைச்சர் விஜய்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
04 Oct 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 04 Oct 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கோவையில் இருந்து தாராபுரத்துக்கு ஹெலிகாப்டரில் செல்லும் முதல்-அமைச்சர் விஜய்

கோவையில் இருந்து தாராபுரத்துக்கு ஹெலிகாப்டரில் செல்லும் முதல்-அமைச்சர் விஜய்

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக முதல்-அமைச்சர் விஜய் இன்று கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் செல்கிறார். தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் தாராபுரம் மாருதிநகரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்துக்கு செல்கிறார். சாலை வழியாக விஜய் பயணித்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தாராபுரத்தை சென்றடைந்ததும் ரோடு ஷோ மூலம் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார். மாலை 4 மணியுடன் பிரசாரத்தை நிறைவு செய்துவிட்டு அவர் சென்னை திரும்ப உள்ளார். கடந்த 30-ந் தேதி விஜய் கோவையில் இருந்து அவினாசி சாலை, கருமத்தம்பட்டி, காரணம்பேட்டை, பல்லடம் வழியாக காரில் தாராபுரம் சென்றிருந்தார். அப்போது வழியெங்கும் பொதுமக்கள் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதனால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அவர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், விஜயின் சாலைப் பயணத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்களும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதுபோன்ற பாதிப்புகளைத் தவிர்க்கும் நோக்கில், அவரது தற்போதைய பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.