ஆசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டை பிரிவில் இந்தியா தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு 3-வது தங்கப் பதக்கமும் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான 80 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அங்குஷ் பங்கால், தென்கொரியாவின் கிம் மின்-சோங்கை எதிர்த்து விளையாடினார். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய அங்குஷ், 4-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வசப்படுத்தினார்.
Advertisement
இதன் மூலம் நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையில் இந்தியாவென்றுள்ள தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2018-ஆம் ஆண்டு அமித் பங்கால் தங்கம் வென்றதைத் தொடர்ந்து, ஆசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற இந்திய ஆண் வீரர் என்ற பெருமையையும் அங்குஷ் பெற்றுள்ளார். இதற்கு முன்பு பெண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் பர்வீன் ஹூடாவும், 75 கிலோ எடைப்பிரிவில் லவ்லினாவும் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தனர்.