கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: சாம்பியன் பட்டப் போட்டியில் குகேஷுக்கு மேலும் ஒரு பின்னடைவு
சென்னையில் நடைபெற்று வரும் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் மொத்தம் 8 வீரர்கள் பங்கேற்று, 7 சுற்றுகள் கொண்ட போட்டியில் மோதி வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற 6-வது சுற்று ஆட்டத்தில், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய உலக சாம்பியனும் தமிழக வீரருமான குகேஷ், சக இந்திய வீரர் பிரனேஷிடம் 39-வது நகர்த்தலில் தோல்வியை சந்தித்தார்.இதன் மூலம் ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் வாய்ப்பை இழந்திருந்த குகேஷ், இந்த தொடரில் தனது 3-வது தோல்வியை பதிவு செய்துள்ளார்.