Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 03 அக்டோபர் 2026 | 17 புரட்டாசி பராபவ வருடம்

காந்தி ஜெயந்தி தடையை மீறி இறைச்சி விற்ற 10 கடைகளுக்கு அபராதம்

காந்தி ஜெயந்தி தடையை மீறி இறைச்சி விற்ற 10 கடைகளுக்கு அபராதம்

புதுச்சேரியில் காந்தி ஜெயந்தியையொட்டி விதிக்கப்பட்ட இறைச்சி விற்பனைத் தடையை மீறிய 10 கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் மொத்தம் ரூ.7,000 அபராதம் விதித்துள்ளது. மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி, நாடு முழுவதும் இறைச்சி மற்றும் மதுபானக் கடைகளை மூடுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டும் புதுச்சேரி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காந்தி ஜெயந்தி தினமான வெள்ளிக்கிழமை இறைச்சி விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதுச்சேரி பெரிய மார்க்கெட் பகுதியில் தடையை மீறி ரகசியமாக ஆட்டு இறைச்சி விற்பனை நடைபெறுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

Advertisement
இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பிரிவு ஊழியர்கள் இணைந்த குழுவினர் மார்க்கெட் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரசு உத்தரவை மீறி இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட 10 கடைகள் கண்டறியப்பட்டன. அந்தக் கடைகளுக்கு சம்பவ இடத்திலேயே மொத்தம் ரூ.7,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இனி தடை விதிக்கப்பட்ட நாட்களில் அரசு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தடையை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு