Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 25 ஆகஸ்ட் 2026 | 9 ஆவணி பராபவ வருடம்

காதலி கொடுத்த லிப்ஸ்டிக் முத்தம்; போலீசாருக்கு ரூ.5,500 அபராதம் செலுத்திய காதலன்

காதலி கொடுத்த லிப்ஸ்டிக் முத்தம்; போலீசாருக்கு ரூ.5,500 அபராதம் செலுத்திய காதலன்
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் சுமார் 3,400 லிப்ஸ்டிக் முத்தத் தடங்களுடன் சாலையில் வலம் வந்த கார் ஒன்று பொதுமக்களையும், போக்குவரத்து போலீசாரையும் கவனிக்க வைத்தது.குவாலியரைச் சேர்ந்த ஆதித்யா சிகர்வாருக்கு சொந்தமான அந்த காரின் வெளிப்புறம் முழுவதும் லிப்ஸ்டிக் முத்தத் தடங்கள் காணப்பட்டன. வித்தியாசமான தோற்றத்தில் இருந்த காரை பார்த்த சாலையில் சென்றவர்கள், அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.இதனால்அந்தகார்தொடர்பானபுகைப்படங்கள்வேகமாகவைரலானது.விசாரணையில், வெளிநாடுகளில் சமூக வலைதளங்களில் பிரபலமாகியிருந்த வித்தியாசமான டிரெண்டால் ஈர்க்கப்பட்ட ஆதித்யாவின் காதலி, அதனை காரில் முயற்சி செய்தது தெரியவந்தது. இதற்காக காரின் மீது ஆயிரக்கணக்கான லிப்ஸ்டிக் முத்தத் தடங்களை அவர் பதித்துள்ளார்.சுமார் 4 மணி நேரம் செலவிட்டு 3,400 முத்தத் தடங்கள் காரில் பதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காரின் பெரும்பாலான பகுதிகளிலும் தடங்கள் காணப்பட்டதால், அது செல்லும் இடமெல்லாம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.இந்த நிலையில், காரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
Advertisement
புகைப்படத்தில் தெளிவாகத் தெரிந்த வாகனப் பதிவு எண்ணை வைத்து காரை கண்டுபிடித்தனர்.இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளர் ஆதித்யா சிகர்வாரை அழைத்து விசாரணை நடத்தினர். போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி அவருக்கு ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது.போலீசாரின் நடவடிக்கையைத் தொடர்ந்து தனது தவறை ஆதித்யா ஒப்புக்கொண்டார். பின்னர் காரில் இருந்த ஆயிரக்கணக்கான லிப்ஸ்டிக் முத்தத் தடங்கள் அகற்றப்பட்டு, கார் முழுமையாக கழுவி மீண்டும் பழைய தோற்றத்துக்கு கொண்டு வரப்பட்டது.காதலின் அடையாளமாக உருவான இந்த ‘முத்தக் கார்’ சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்ற நிலையில், அதன் உரிமையாளருக்கு இறுதியில் ரூ.5,500 அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு