கரூர் நெரூரில் சோகம்: காவிரி ஆற்றில் மூழ்கி 3 அர்ச்சகர்கள் உயிரிழப்பு
கரூர் மாவட்டத்தின் நெரூரில் காவிரி ஆற்றங்கரையில் இன்று முன்னோர்களுக்கு திதி செலுத்துவதற்காக ஏராளமானோர் திரண்டிருந்தனர். அந்த நேரத்தில், அப்பகுதியைச் சேர்ந்த மூன்று அர்ச்சகர்கள் திதி தொடர்பான சடங்குகளை நடத்துவதற்காக ஆற்றில் இறங்கியதாக கூறப்படுகிறது.சடங்குகளை மேற்கொண்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மூவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த உயிரிழப்பு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தின் காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.