பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்குச் சென்றுள்ளார். தனது பயணத்தின் முதல் கட்டமாக உஸ்பெகிஸ்தான் சென்ற அவர், அந்நாட்டு அதிபர் ஷாவ்கத் மிர்ஸியோயேவை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்துஆலோசிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து,உஸ்பெகிஸ்தானின் உயரிய விருதான ‘ஒலிய தராஜலி தோஸ்த்லிக்’ விருது பிரதமர் மோடிக்குவழங்கப்பட்டது.அந்நாட்டுஅதிபர்ஷாவ்கத்மிர்ஸியோயேவ்இந்தவிருதைஅவருக்குவழங்கினார்.உஸ்பெகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிர்கிஸ்தான் சென்றடைந்தார்.
Advertisement
அந்நாட்டு அதிபர் சதிர் ஜாபரோவின் அழைப்பை ஏற்று, 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் பிஷ்கெக் நகருக்குச் சென்றுள்ளார்.கிர்கிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பின்னர் பிஷ்கெக் நகரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.