Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 07 நவம்பர் 2026 | 21 ஐப்பசி பராபவ வருடம்

கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ்

கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான தனது நண்பர் கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
மேலும், திரையுலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன், நூறாண்டுகள் நோயற்ற நலமான வாழ்க்கை வாழ்வதுடன், பொதுவாழ்விலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் எனத் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு