நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான தனது நண்பர் கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், திரையுலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன், நூறாண்டுகள் நோயற்ற நலமான வாழ்க்கை வாழ்வதுடன், பொதுவாழ்விலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் எனத் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.