Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 24 செப்டம்பர் 2026 | 8 புரட்டாசி பராபவ வருடம்

கேப்டன் - பயிற்சியாளர் என்பதை தாண்டி...ரோகித் சர்மா குறித்து கவுதம் கம்பீர்

கேப்டன் - பயிற்சியாளர் என்பதை தாண்டி...ரோகித் சர்மா குறித்து கவுதம் கம்பீர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவுடனான தனது உறவு, கேப்டன் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் என்ற பணிப் பொறுப்புகளுக்குள் மட்டும் இருந்ததில்லை என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ரோகித் இந்திய அணியில் இடம்பெற்ற காலத்தில், தான் அணியின் சீனியர் வீரராக இருந்ததாகவும், அப்போது முதலே இருவருக்கும் இடையிலான நட்பு மற்றும் புரிதல் உருவானதாகவும் கம்பீர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: “ரோகித்துக்கும் எனக்கும் இடையிலான உறவு கேப்டன் - பயிற்சியாளர் என்ற வரம்புக்குள் மட்டும் இருந்ததில்லை. அவர் இந்திய அணிக்கு வந்தபோது நான் சீனியர் வீரராக இருந்தேன். அப்போது தொடங்கிய எங்களது உறவு தொடர்ந்து நீடித்தது. ரோகித் என்னை நீண்ட காலமாக அறிந்தவர். நாங்கள் இணைந்து விளையாடிய அனுபவம் இருப்பதால், ஒருவருடைய எண்ணத்தை மற்றொருவர் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

Advertisement
அவருடைய சிந்தனை என்ன என்பதும், என்னுடைய அணுகுமுறை என்ன என்பதும் இருவருக்கும் தெரியும். சில நேரங்களில் பயிற்சியாளரான எனக்கு ஒரு கருத்தும், கேப்டனாக இருந்த ரோகித்துக்கு வேறொரு கருத்தும் இருக்கலாம். ஆனால் இறுதியில் அணியின் நலனுக்கு எது சிறந்ததோ, அந்த முடிவையே எடுக்க வேண்டும். அணியின் நலனை கருத்தில் கொண்டு சரியான முடிவு எடுக்கப்படுவதைவிட சிறந்தது வேறு எதுவும் இல்லை. நான் பணியாற்றிய நான்கு கேப்டன்களுடனும் இதுபோன்ற அனுபவமே எனக்கு இருந்துள்ளது. அனைவரின் முதன்மையான கவனமும் இந்திய கிரிக்கெட்டின் நலன் மீதே இருந்தது” என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,000
🥈 Silver ₹250.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு