கனடாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு: இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
கனடாவில் நடைபெற்ற பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை முறியடித்த போலீசார், இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேரை கைது செய்துள்ளனர். இந்த சோதனையில் 1.7 டன் போதைப்பொருட்களும், 17 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அமெரிக்க எல்லை வழியாக லாரிகளில் கனடாவுக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அமெரிக்கா–கனடா இடையே இயக்கப்படும் லாரிகளில் கொக்கைன், மெத்தம்பெட்டமைன் மற்றும் ஓப்பியம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, கனடா போலீசார் 'புராஜெக்ட் பே' என்ற பெயரில் ஒருங்கிணைந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆண்டாரியோவில் 22 இடங்களிலும், விண்ட்சர், லசலே, கொரூனா, பிராம்ப்டன், மார்ஹம் மற்றும் கலேடன் உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.