Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

“ஓய்வு பெற்ற பிறகுதான் புரியும்”... கோலியின் சாதனைகளுக்கு இயன் பிஷப் புகழாரம்

“ஓய்வு பெற்ற பிறகுதான் புரியும்”... கோலியின் சாதனைகளுக்கு இயன் பிஷப் புகழாரம்

விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரே, அவர் படைத்துள்ள சாதனைகளின் முழுமையான சிறப்பை ரசிகர்களும் கிரிக்கெட் உலகமும் உணர்வார்கள் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் பிஷப் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி, ஆட்டமிழக்காமல் 139 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 55-வது சதத்தை பதிவு செய்த அவர், இந்த வடிவத்தில் 15,000 ரன்களையும் கடந்தார்.

Advertisement
கோலியின் இந்த சாதனை குறித்து இயன் பிஷப் கூறியதாவது: “நீண்ட காலமாக விராட் கோலி தனது ஆட்டத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார். கிரிக்கெட் மீதான அவரது மிகப்பெரிய அர்ப்பணிப்பே இதற்கு முக்கிய காரணமாக இருக்க வேண்டும். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கி வருகிறார். கிரிக்கெட்டில் இருந்து கோலி ஓய்வு பெற்ற பிறகுதான், அவர் உருவாக்கியுள்ள சாதனைகளின் உண்மையான மதிப்பை ரசிகர்களும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் முழுமையாக புரிந்துகொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு