Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வியாழன் | 10 செப்டம்பர் 2026 | 25 ஆவணி பராபவ வருடம்

எங்கள் கட்சி வெற்றி பெற்றால் தலைக்கு ரூ.5 ஆயிரம் டாலர்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு

எங்கள் கட்சி வெற்றி பெற்றால் தலைக்கு ரூ.5 ஆயிரம் டாலர்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்:வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்று, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.4.76 லட்சம்) வழங்கப்படும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் ஆகும். பதவிக்காலத்தின் பாதி நிறைவடையும் நிலையில், நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் உறுப்பினர்களுக்கான தேர்தலுடன், பல்வேறு மாநிலங்களில் கவர்னர், மேயர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களும் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது.

Advertisement
இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், நவம்பர் தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றால் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என்றும், இந்தத் தொகையை அமெரிக்காவிற்குள் மட்டுமே செலவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். எனினும், வாக்குகளைப் பெறுவதற்காக மக்களுக்கு பணம் வழங்குவதாக டிரம்ப் அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சியினரும், சமூக வலைதளப் பயனர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், அமெரிக்கர்களுக்கு இந்தத் தொகையை வழங்குவதற்கான நிதி எங்கிருந்து பெறப்படும் என்பது குறித்து டிரம்ப் இதுவரை முறையான விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு