Skip to main content
🌤️ —°C
சனி | 15 ஆகஸ்ட் 2026 | 30 ஆடி பராபவ வருடம்

உகாண்டாவில் வேன் மீது லாரி மோதிய விபத்து: 14 பேர் உயிரிழப்பு

உகாண்டாவில் வேன் மீது லாரி மோதிய விபத்து: 14 பேர் உயிரிழப்பு
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் மத்திய மாகாணத்தில் உள்ள கலுங்கு மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு நடைபெற்ற சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 18 பேருடன் சென்ற வேன், கலுங்கு மாவட்டத்தின் கமுங்கா நகரம் அருகே சென்றபோது, எதிர்திசையில் அதிவேகமாக வந்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.இதற்கிடையில், விபத்துக்குப் பிறகு தப்பிச் சென்ற லாரி ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடும் பணியுடன் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு