Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 12 செப்டம்பர் 2026 | 27 ஆவணி பராபவ வருடம்

இளையராஜா இசையமைக்கும் ‘தட்டுவண்டி’ திரைப்படத்தின் இசைப் பணிகள் தீவிரம்

இளையராஜா இசையமைக்கும் ‘தட்டுவண்டி’ திரைப்படத்தின் இசைப் பணிகள் தீவிரம்

இசைஞானி இளையராஜா இசையமைக்கும் ‘தட்டுவண்டி’ திரைப்படத்தின் பாடல் பதிவு மற்றும் பின்னணி இசைப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை, ‘பில்டர் கோல்டு’ திரைப்படத்தின் மூலம் 2021-ஆம் ஆண்டு இரண்டு மாநில அரசுகளின் விருதுகளை வென்ற இயக்குநர் விஜயபாஸ்கர் இயக்கியுள்ளார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.

Advertisement
இந்தப் படத்தில் சிறுவன் ராகவன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், திலீபன், மேரி பென்சி குளோரியா, தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது பாடல் பதிவு மற்றும் பின்னணி இசைப் பணிகள் இறுதிக்கட்டத்தை நோக்கி நடைபெற்று வருகின்றன. தயாரிப்பு பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளதால், ‘தட்டுவண்டி’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
PRGI NO : TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு