இளையராஜா இசையமைக்கும் ‘தட்டுவண்டி’ திரைப்படத்தின் இசைப் பணிகள் தீவிரம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Jul 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Jul 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

இளையராஜா இசையமைக்கும் ‘தட்டுவண்டி’ திரைப்படத்தின் இசைப் பணிகள் தீவிரம்

இளையராஜா இசையமைக்கும் ‘தட்டுவண்டி’ திரைப்படத்தின் இசைப் பணிகள் தீவிரம்

இசைஞானி இளையராஜா இசையமைக்கும் ‘தட்டுவண்டி’ திரைப்படத்தின் பாடல் பதிவு மற்றும் பின்னணி இசைப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை, ‘பில்டர் கோல்டு’ திரைப்படத்தின் மூலம் 2021-ஆம் ஆண்டு இரண்டு மாநில அரசுகளின் விருதுகளை வென்ற இயக்குநர் விஜயபாஸ்கர் இயக்கியுள்ளார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தில் சிறுவன் ராகவன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், திலீபன், மேரி பென்சி குளோரியா, தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது பாடல் பதிவு மற்றும் பின்னணி இசைப் பணிகள் இறுதிக்கட்டத்தை நோக்கி நடைபெற்று வருகின்றன. தயாரிப்பு பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளதால், ‘தட்டுவண்டி’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.