Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 07 அக்டோபர் 2026 | 21 புரட்டாசி பராபவ வருடம்

இமாச்சலபிரதேசம்: அடல் சுரங்கப்பாதையை பார்வையிட்ட ஜனாதிபதி முர்மு

இமாச்சலபிரதேசம்: அடல் சுரங்கப்பாதையை பார்வையிட்ட ஜனாதிபதி முர்மு

ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக இமாச்சலபிரதேசம் சென்றுள்ளார். தனது பயணத்தின் முதல் நாளில் பிலஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர், மாணவ-மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.

பயணத்தின் 2-வது நாளான இன்று, மணாலியில் உள்ள இடும்பி தேவி கோயிலுக்குச் சென்ற ஜனாதிபதி முர்மு, அங்கு வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, லாஹவுல்-ஸ்பிதி மாவட்டத்தில் ரோஹ்தங் பகுதியில் அமைந்துள்ள அடல் சுரங்கப்பாதையை அவர் பார்வையிட்டார்.

Advertisement

இமாச்சலபிரதேசத்தில் அமைந்துள்ள அடல் சுரங்கப்பாதை, உலகின் மிக உயரமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.

இமாச்சலபிரதேசத்தில் தனது 3 நாள் பயணத்தை நிறைவு செய்யும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாளை டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு