Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 07 அக்டோபர் 2026 | 21 புரட்டாசி பராபவ வருடம்

நடப்பு ஆண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி 7.1 சதவீதம் ஆக இருக்கும்: உலக வங்கி கணிப்பு

நடப்பு ஆண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி 7.1 சதவீதம் ஆக இருக்கும்:  உலக வங்கி கணிப்பு

நடப்பு ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக செயல்பட்டு, 7.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், நடப்பு ஆண்டுக்கான ஜி.டி.பி. வளர்ச்சி மதிப்பீட்டை உலக வங்கி உயர்த்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 6.6 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 7.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பொருளாதார வளர்ச்சியில் தனியார் நுகர்வு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. பொதுமக்களின் முதலீடு, சாதகமான நிதிச்சூழல் மற்றும் ஆதரவான கொள்கை நடவடிக்கைகளும் வளர்ச்சிக்கு துணைபுரிகின்றன. இதேபோல், ஏற்றுமதியும் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Advertisement

விநியோகத் தரப்பைப் பொறுத்தவரை, தொழிற்சாலை செயல்பாடுகள் எதிர்பார்ப்புகளை மிஞ்சியுள்ளன. உள்கட்டமைப்பு, கட்டுமானப் பொருட்கள் மற்றும் மின் உற்பத்தித் துறைகளும் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

அதேவேளையில், தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால், கிராமப்புறங்களில் வேளாண் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவைத் துறையைப் பொறுத்தவரை, தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றம் காணப்படுவதாக உலக வங்கி தனது கணிப்பில் குறிப்பிட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு