இமாச்சலபிரதேசம்: அடல் சுரங்கப்பாதையை பார்வையிட்ட ஜனாதிபதி முர்மு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
07 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 07 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

இமாச்சலபிரதேசம்: அடல் சுரங்கப்பாதையை பார்வையிட்ட ஜனாதிபதி முர்மு

இமாச்சலபிரதேசம்: அடல் சுரங்கப்பாதையை பார்வையிட்ட ஜனாதிபதி முர்மு

ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக இமாச்சலபிரதேசம் சென்றுள்ளார். தனது பயணத்தின் முதல் நாளில் பிலஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர், மாணவ-மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். பயணத்தின் 2-வது நாளான இன்று, மணாலியில் உள்ள இடும்பி தேவி கோயிலுக்குச் சென்ற ஜனாதிபதி முர்மு, அங்கு வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, லாஹவுல்-ஸ்பிதி மாவட்டத்தில் ரோஹ்தங் பகுதியில் அமைந்துள்ள அடல் சுரங்கப்பாதையை அவர் பார்வையிட்டார். இமாச்சலபிரதேசத்தில் அமைந்துள்ள அடல் சுரங்கப்பாதை, உலகின் மிக உயரமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது. இமாச்சலபிரதேசத்தில் தனது 3 நாள் பயணத்தை நிறைவு செய்யும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாளை டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.