Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 14 அக்டோபர் 2026 | 28 புரட்டாசி பராபவ வருடம்

ஆந்திரா: யூடியூப் பார்த்து தங்கம் தேடிச் சென்றவர்.. மலைச் சுரங்கத்தில் சிக்கியதால் பரபரப்பு

ஆந்திரா: யூடியூப் பார்த்து தங்கம் தேடிச் சென்றவர்.. மலைச் சுரங்கத்தில் சிக்கியதால் பரபரப்பு

ஆந்திர மாநிலத்தில், யூடியூப் வீடியோவைப் பார்த்து தங்கம் எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் மலைச் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டார். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் அவரைப் பத்திரமாக மீட்டனர். நெல்லூர் மாவட்டம், புச்சிரெட்டிபாலேனியைச் சேர்ந்தவர் பிரபாகர் ரெட்டி. பள்ளி பாலேனியைச் சேர்ந்தவர் கிஷ்டய்யா. நண்பர்களான இருவரும், சத்ய சாய் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிரி மலையில் தங்கச் சுரங்கம் இருப்பதாக யூடியூப் மூலம் அறிந்துள்ளனர். அங்கு சென்றால் தங்கத்தை எளிதாகப் பெறலாம் என நினைத்து, இருவரும் அந்த இடத்திற்குச் செல்லத் திட்டமிட்டனர். இதன்படி, சம்பவத்தன்று இரவு 10.30 மணியளவில் யாருக்கும் தெரிவிக்காமல் இருவரும் ராமகிரி மலைக்குச் சென்றனர். யூடியூப் வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்த இடத்தை அடைந்ததும், பிரபாகர் ரெட்டி கயிற்றின் உதவியுடன் சுரங்கத்திற்குள் இறங்கினார். ஆனால், சுரங்கத்தின் உள்ளே இருள் சூழ்ந்திருந்ததுடன், போதிய காற்றும் இல்லாததால் அவர் அச்சமடைந்தார். அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்த அவர், தன்னைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டார்.

Advertisement
சுரங்கத்திற்குள் சிக்கிய நண்பரை மீட்க கிஷ்டய்யா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். எனினும், அவரால் நண்பரை மீட்க முடியவில்லை. இதையடுத்து, மலையிலிருந்து கீழே இறங்கிய கிஷ்டய்யா, ராமகிரி காவல் நிலையத்திற்குச் சென்று போலீசாரிடம் நடந்த சம்பவத்தைத் தெரிவித்தார். தங்கம் தேடும் முயற்சியில் தனது நண்பர் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டதாகக் கூறி, அவரை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, தர்மவரத்திலிருந்து தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். போலீசார், தீயணைப்புப் படையினர் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர முயற்சிக்குப் பின்னர், அதிகாலை 2 மணியளவில் பிரபாகர் ரெட்டி சுரங்கத்திலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டார். பின்னர், இதுபோன்று யூடியூப் வீடியோக்களைப் பார்த்துவிட்டு ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என பிரபாகர் ரெட்டி மற்றும் கிஷ்டய்யா ஆகிய இருவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,590
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு