20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் வெல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கலப்பு ஸ்கீட் அணிகள் பிரிவில் இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவின் சார்பில் அனந்த்ஜீத் சிங் நருகா மற்றும் பரினாஸ் தாலிவால் ஆகியோர் கலப்பு ஸ்கீட் போட்டியில் பங்கேற்றனர். தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட இருவரும், இறுதிப்போட்டிக்கான தகுதியை பெற்றுள்ளனர்.
Advertisement
கலப்பு ஸ்கீட் போட்டிக்கான இறுதிச்சுற்று இன்று நடைபெற உள்ளது. இதன் மூலம் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் ஸ்கீட் போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள நிலையில், தற்போது கலப்பு அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.