ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நேரடியாக காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. இதையடுத்து, ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி, டார்விஷ் ரசூலி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருந்தது. இந்த ஆட்டம் நிஷின் நகரில் உள்ள கரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் போட்டி நடைபெற இருந்த மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனை நேரில் காண வந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். எனினும், போட்டி ரத்து செய்யப்பட்டதால் இந்திய அணியின் அடுத்தகட்ட வாய்ப்பு பாதிக்கப்படவில்லை.
Advertisement
சர்வதேச டி20 தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் 10-வது இடத்திலும் இருப்பதால், தரவரிசை அடிப்படையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி வரும் 1-ம் தேதி அரையிறுதிப் போட்டியில் விளையாடுகிறது. கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், திலக் வர்மா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் பட்டேல் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளதால், அரையிறுதியில் இந்திய அணிக்கு சாதகமான நிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.