Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 25 செப்டம்பர் 2026 | 9 புரட்டாசி பராபவ வருடம்

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சி... நேபாளம் வெற்றி

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சி... நேபாளம் வெற்றி

2026 ஆசிய விளையாட்டு போட்டியில் நடைபெற்ற ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நேபாளம் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், நேபாள பந்துவீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் 102 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து நேபாளத்துக்கு 103 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Advertisement
இந்த இலக்கை எட்ட களமிறங்கிய நேபாளத்துக்கும் தொடக்கம் எதிர்பார்த்தபடி அமையவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் போட்டியில் பரபரப்பு அதிகரித்தது. எனினும், நிதானமாக போராடிய நேபாள அணி 17.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது.இதன் மூலம் நேபாள அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு