Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 27 செப்டம்பர் 2026 | 11 புரட்டாசி பராபவ வருடம்

ஆக்கியில் அரைஇறுதிக்கு முன்னேறிய இந்திய அணி

ஆக்கியில் அரைஇறுதிக்கு முன்னேறிய இந்திய அணி

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆக்கி பிரிவில் 12 அணிகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றன. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி, நேற்று நடைபெற்ற தனது 4-வது லீக் ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இதன்மூலம் தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பதிவு செய்த இந்தியா, தனது பிரிவில் முதலிடத்தை தக்கவைத்ததுடன் அரைஇறுதி சுற்றுக்கான இடத்தையும் உறுதி செய்தது.

Advertisement
இந்திய அணிக்காக அபிஷேக் 15-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 40-வது நிமிடத்தில் 2-வது கோலை பதிவு செய்தார். இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. பேட்மிண்டனிலும் இந்தியாவுக்கு முன்னேற்றம் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன தைபேயின் சி பின் சியானை எதிர்கொண்டார். இதில் 21-19, 21-14 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்ற சிந்து, 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு