Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 31 ஜூலை 2026 | 15 ஆடி பராபவ வருடம்

விஜய் பெங்களூரு வந்தால் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம்; வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை

விஜய் பெங்களூரு வந்தால் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம்; வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை
தமிழக முதல்-அமைச்சர் விஜய் பெங்களூரு செல்லக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் வந்தால் பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என கன்னட சாலுவாலி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.காவிரி நதி நீர் பகிர்வு விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகள் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தின. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வாட்டாள் நாகராஜ், "தமிழக முதல்-அமைச்சர் விஜய் பெங்களூருவுக்கு வந்தால் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம். தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டை அவர் எடுத்தால் அவரை வரவேற்போம். மேலும், தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 13-ஆம் தேதி கர்நாடகாவில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் தழுவிய பந்த் நடைபெறும்" என்று தெரிவித்தார்.காவிரி நீர் பகிர்வு தொடர்பான பிரச்சினை தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. குறிப்பாக மழைப்பொழிவு குறையும் காலங்களில் இந்த விவகாரம் தீவிரமடைவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டும் கர்நாடகாவில் போதிய மழை இல்லாததால், அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடுவது தொடர்பாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.இதனுடன், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை அமைக்கும் முயற்சியையும் கர்நாடக அரசு முன்னெடுத்து வருகிறது.
Advertisement
இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இந்த இரு விவகாரங்களுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்ற நிலைப்பாட்டில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக காவிரி நீர் பிரச்சினை மற்றும் மேகதாது அணை தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாரை சந்தித்து ஆலோசிக்க அவர் கடிதம் அனுப்பியுள்ளார். இதன் அடிப்படையில், வரும் 3-ஆம் தேதி (திங்கட்கிழமை) விஜய் பெங்களூரு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில், விஜயின் கர்நாடக பயணத்துக்கு தமிழகத்தின் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதே நேரத்தில், முதல்-அமைச்சர் விஜயின் கர்நாடக பயணம் குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் இன்று தெரிவித்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு