Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 31 ஜூலை 2026 | 15 ஆடி பராபவ வருடம்

என்னது.. 1¼ கிலோ மீன் விலை ரூ.15 ஆயிரமா? புலாசா மீனின் சிறப்பு என்ன?

என்னது.. 1¼ கிலோ மீன் விலை ரூ.15 ஆயிரமா? புலாசா மீனின் சிறப்பு என்ன?
புதுச்சேரியில் இருந்து விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் அரிய வகையைச் சேர்ந்த புலாசா மீன் ஒன்று சிக்கியது. சுமார் 1¼ கிலோ எடை கொண்ட அந்த மீன் கரைக்கு கொண்டு வரப்பட்டபோது, நடைபெற்ற ஏலத்தில் ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனையானது.இந்த புலாசா மீனை ஒரு பெண் ஏலத்தில் ரூ.15 ஆயிரம் கொடுத்து வாங்கிய சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பொதுவாக அதிக எடை கொண்ட அரிய மீன்கள் உயர்ந்த விலைக்கு விற்கப்படுவது வழக்கமாக இருந்தாலும், வெறும் 1¼ கிலோ எடையுள்ள மீன் இவ்வளவு விலைக்கு விற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநில மக்களால் "மீன்களின் ராஜா" என்று அழைக்கப்படும் புலாசா மீன், அதன் தனித்துவமான சுவை மற்றும் அதிக சத்துக்களுக்காக மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது.
Advertisement
இந்த மீன் மிகவும் அரிதாகவே வலையில் சிக்கும் என்பதால் சந்தையில் அதற்கு அதிக தேவை நிலவுகிறது.புலாசா மீன் பிடிபடும் ஒவ்வொரு முறையும், அதன் எடையைப் பொறுத்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலை கிடைப்பதாக கூறப்படுகிறது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு