Skip to main content
🌤️ —°C
சனி | 15 ஆகஸ்ட் 2026 | 30 ஆடி பராபவ வருடம்

யாஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ படத்தின் டிரெய்லர் வெளியானது

யாஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ படத்தின் டிரெய்லர் வெளியானது
‘கே.ஜி.எப்’ திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் யாஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த கேங்ஸ்டர் டிராமாவில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான ‘லேடீஸ் அண்ட் லேடீஸ்’ அறிமுக வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களின் செயல்பாடுகளை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் திரைப்படம் தயாராகியுள்ளது.சமீபத்தில் வெளியான ‘டாக்ஸிக்’ படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
Advertisement
அதேவேளையில், டீசரில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு எதிராக விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியதால் படம் குறித்த எதிர்பார்ப்பும் பேசுபொருளாகியது.இந்நிலையில், ‘டாக்ஸிக்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் வன்முறை காட்சிகளுடன் நிர்வாணக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. யாஷ் அப்பா மற்றும் மகன் என இரு வேடங்களில் தோன்றி மிரட்டியுள்ளார். டிரெய்லர் வெளியான நிலையில், அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.‘டாக்ஸிக்’ திரைப்படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு