Skip to main content
🌤️ —°C
சனி | 15 ஆகஸ்ட் 2026 | 30 ஆடி பராபவ வருடம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 8-வது நினைவு நாள்: மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 8-வது நினைவு நாள்: மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
தமிழக அரசியலில் முக்கிய தடம் பதித்த முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 8-வது நினைவு நாள் இன்று (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.1924 ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தின் திருக்குவளையில் பிறந்த கருணாநிதி, 1957 முதல் 2018 வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார். மேலும், சுமார் 40 ஆண்டுகள் தி.மு.க. தலைவராகவும், ஐந்து முறை தமிழக முதலமைச்சராகவும் பொறுப்பேற்று அரசியல் வாழ்வில் தனித்துவமான இடத்தைப் பெற்றார். அவர் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமானார். அவரது 8-வது நினைவு நாளையொட்டி, தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இதனை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி இன்று காலை சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகில் இருந்து தொடங்கியது.
Advertisement
இதில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.அமைதிப் பேரணி காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தை சென்றடைந்ததைத் தொடர்ந்து, அங்கு மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், தி.மு.க.வின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு