நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா தொடங்கியது ...
திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர்–காந்திமதி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. அதிகாலை நடைபெற்ற சிறப்பு பூஜைகள், யாகசாலை வழிபாடுகள் மற்றும் தீபாராதனையைத் தொடர்ந்து கொடிமரத்தில் விழாக்கொடி ஏற்றப்பட்டது.
திருவிழாவை முன்னிட்டு காந்திமதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோவில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. வரும் நாட்களில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம், பல்வேறு வாகனங்களில் வீதி உலா, சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என கோவில் நிர்வாகம் எதிர்பார்க்கிறது.